Puducherry Power shutdown: புதுச்சேரியில் நாளை 05-05-2025 வெங்கட்டா நகர் மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் (காலை 09:00 மணி முதல் 1:00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் திங்கட்கிழமை (05.05.2025) நாளை மின் தடை
புதுச்சேரியில் நாளை (05.05.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி வெங்கட்டாநகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (05.05.2025) நடக்கிறது. இதையொட்டி காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை புஸ்சி வீதிக்கு வடக்கு, முத்தியால்பேட்டைக்கு தெற்கு, கடற்கரை சாலைக்கு மேற்கு, சத்தியாநகர் மற்றும் சக்தி நகருக்கு கிழக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
அதாவது முத்தியால்பேட்டை, கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், வெங்கட்டாநகர், குருசுக்குப்பம், வைத்திக்குப்பம், குபேர் சாலை, டவுன் புல்வார்டு, கோவிந்தசாலை, பிருந்தாவனம், சாந்திநகர், இளங்கோ நகர், காமராஜர் சாலை, சாரம், ராஜய்யர் தோட்டம், லெனின் வீதி, சத்தியாநகர் மற்றும் சக்தி நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்
எனவே பொதுமக்கள் முன்கூட்டியே அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் செல்போன் சார்ஜ் போட்டுக் கொள்ளவும் மேலும் குடிநீர் போன்றவற்றை முன்னெச்சரிக்காது சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.