புதுச்சேரி: வறுமையின் காரணமாக சிலர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடுவது வழக்கமகா உள்ளது. சிலர் எளிதில் பணம் கிடைக்க வேண்டும், உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக அளவிலான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவர். ஆனால், புதுவையில் மது குடிக்கவும், மதுவுக்கு சைடிஷ் தயாரிக்கவும் மீன்களை திருடியவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Sivakumar Speech | கலைஞர் காலில் விழுந்து வணங்கணும்! நடிகர் சிவக்குமார் பேச்சு


Senthil Balaj |அதிமுக ஐடி விங்கை பயன்படுத்தி விஷமப் பிரச்சாரம் - கொந்தளித்த செந்தில்பாலாஜி


புதுவை ரெட்டியார் பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் தனக்கு சொந்தமான மீன்களை, பெரிய மார்க்கெட் மீன் அங்காடியில் ஐஸ் பெட்டியில் வைத்திருந்தார். மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்த நிலையில் கடந்த 15ந் தேதிக்கு பின் மீன் விற்பனை செய்ய மீன் பெட்டியை ராஜேஷ் திறந்து பார்த்தார். ஐஸ் பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மீன்கள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்  நடைபாதையில் வசிக்கும் விஜய் (22), சதீஷ் (22) மற்றும் குரு ஆகியோர் மீன்களை திருடியது பதிவாகியிருந்தது. 


Prashant Kishore|காங்கிரஸ் 2.0! பிரசாந்த் கிஷோர் சொல்லியிருப்பது இதுதான்..!



Udhyanidhi Speech |என்னோட கார எடுத்துக்கோங்க!கமலாலயம் மட்டும் போகாதீங்க!எடப்பாடியை கலாய்த்த உதயநிதி!


இதையடுத்து விஜய், சதீஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தப்பியோடிய குருவை தேடி வருகின்றனர்.  இவர்கள் இரவு நேரத்தில் சாலையோரத்தில் தங்கி, நகர பகுதியில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததும், இரவில் ஐஸ் பெட்டிகளை திறந்து மீனை திருடி விற்று மது வாங்கியதும் தெரிய வந்தது.  மது அருந்த சைடிசுக்காக திருடிய மீனை சமைத்து தின்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


VCK Thirumavalavan Speech : ”ஆளுநரை மாற்றவேண்டாம்.. ஆளுநரே தேவையில்லை..” திருமாவளவன் அதிரடி


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண