கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா நகரமான புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு படையெடுக்கின்றனர். இதனால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி உள்ளன.
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதன் ஒருபகுதியாக தேவாலயங்களிலும், வீடுகளிலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை காட்சிப்படுத்தும் வகையில், சிறிய குடில் அமைக்கின்றனர். இந்த குடிலுக்குள், குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், தேவதூதர்கள், மூன்று அரசர்கள் ஆகியோரின் சிறிய வடிவ பொம்மைகள் வைக்கப்படும். இவர்களோடு பெத்லகேமின் விண்மீன், ஒட்டகம், ஆடு, காளை, கழுதை உள்ளிட்ட விலங்குகளும் இடம்பெறும். இந்நிகழ்வு மலைக்குகையிலோ அல்லது மாட்டுத் தொழுவத்திலோ நிகழ்வது போன்று அமைக்கப்படும்.
அண்ணாமலைக்கு பதில் கொடுத்த சைலேந்திரபாபு.. என்ன சொன்னார் தெரியுமா..?
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை செய்ய மிஷன் வீதி, காந்தி வீதி, நேரு வீதி உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குடில்கள் அமைக்க தேவையான பொருட்கள், ஏசு கிறிஸ்து சிலை, பொம்மைகள், அலங்கார பல்புகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், புதுவையில் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர். இதனால் கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டி வருகிறது. கடற்கரை சாலையில் தலைமை செயலகம் முதல் பழைய துறைமுக பாலம் வரை உள்ள செயற்கை மணல் பரப்பில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் புத்தாண்டை முன்னிட்டு நோணாங்குப்பம் படகுகுழாம், பாரடைஸ் பீச்சு போன்ற இடங்களில் அலங்கார விளக்குகள் மூலம் அலங்ககர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.