இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்ததால், பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பொது சுகாதாரத் தயார்நிலை, உலகளாவிய சூழ்நிலை மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டாவியா அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ. அரசுச் செயலர் உதயகுமார், சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர். கூட்டத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப் படுத்துவது, மீண்டும் தடுப்பூசி இருப்பை அதிகரிப்பது படுக்கை மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டன. பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் ஆகிய கோவிட்-19 தடுப்பு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற அறிவுறுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

கூட்டத்தில், கொரோனா பரவலை எதிர்கொள்ள புதுவை அரசு அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் உள்ளதாகவும், கோவிட் மருத்துவமனை போதிய அனைத்து வசதிகளுடன் உள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்க ப்பட்டது. மத்திய அரசு காட்டும் அனைத்து வழிமுறை களையும் புதுவை அரசு பின்பற்றும். புதுவையில் கொரோனா பரிசோ தனைகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதுவையில் 3 ஆயிரத்து 620 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த கூடுதலாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை. அதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கொரோனா வைரசை கண்டறிவதற்கான பரிசோ தனைக் கூடம் புதுவையில் வருகிற 28-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கப்பட உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இந்திரகாந்தி அரசு மருத்துவக் கல்லூ ரியில் ரூ.3 ½கோடியில் உருமாறிய கொரோனா வைரசை கண்டறியும் அதிநவீன கருவிகளுடன் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நுண்கிருமியை துல்லியமாக அறிந்து அதன் இயல்புகளை கண்டறியலாம். இதற்காக டாகடர்கள், தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்ததால், பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பொது சுகாதாரத் தயார்நிலை, உலகளாவிய சூழ்நிலை மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டாவியா அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ. அரசுச் செயலர் உதயகுமார், சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர். கூட்டத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப் படுத்துவது, மீண்டும் தடுப்பூசி இருப்பை அதிகரிப்பது படுக்கை மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டன. பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் ஆகிய கோவிட்-19 தடுப்பு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற அறிவுறுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

கூட்டத்தில், கொரோனா பரவலை எதிர்கொள்ள புதுவை அரசு அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் உள்ளதாகவும், கோவிட் மருத்துவமனை போதிய அனைத்து வசதிகளுடன் உள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்க ப்பட்டது. மத்திய அரசு காட்டும் அனைத்து வழிமுறை களையும் புதுவை அரசு பின்பற்றும். புதுவையில் கொரோனா பரிசோ தனைகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதுவையில் 3 ஆயிரத்து 620 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த கூடுதலாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை. அதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கொரோனா வைரசை கண்டறிவதற்கான பரிசோ தனைக் கூடம் புதுவையில் வருகிற 28-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கப்பட உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இந்திரகாந்தி அரசு மருத்துவக் கல்லூ ரியில் ரூ.3 ½கோடியில் உருமாறிய கொரோனா வைரசை கண்டறியும் அதிநவீன கருவிகளுடன் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நுண்கிருமியை துல்லியமாக அறிந்து அதன் இயல்புகளை கண்டறியலாம். இதற்காக டாகடர்கள், தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.