புதுச்சேரி: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, ஏப்ரல் 14 ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாள் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை கடந்த ஆண்டு முதல் சமத்துவ நாள் என்று அறிவித்தது. அதன்படி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை யொட்டி ஏப்ரல் 14 ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 14ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அனைத்து பிரிவுகளும் மூடப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கும் என ஜிப்மர் நிர்வாகம் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண