புதுச்சேரி உழவர்சந்தையின் ஒரு பகுதியில் பெண்கள் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களில் குமாரி என்பவர் தனது கடையில் செல்போனை வைத்து இருந்தார். அதை அங்கு சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று எடுத்துச்சென்று விட்டது. இதை பார்த்து அந்த பெண் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். மரத்தின் மீது இருந்த அந்த குரங்கிடம் இருந்து செல்போனை கைப்பற்ற பொதுமக்கள் பல்வேறு வகையில் முயன்றனர். அப்போதும் அந்த குரங்கு செல்போனை விடாப்பிடியாக கீழே போட மறுத்தது.


 






அங்கிருந்த ஒருவர் தெரிவித்த யோசனையின்படி அந்த செல்போன் நம்பருக்கு வேறொரு செல்போனில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே அந்த குரங்கு செல்போனை காதில் வைத்து பேசுவது போல் பாவனை காட்டியது. தொடர்ந்து கைகளால் அழுத்தி பார்ப்பது, கடிப்பது என்று தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்தது. அதை அந்த வழியாக சென்ற பலரும் வீடியோ எடுத்தனர். சுமார் ஒரு மணிநேரம் போக்கு காட்டிய அந்த குரங்கு இறுதியாக ஒருகட்டத்தில் தானாகவே மரத்தை விட்டு கீழே இறங்கி வந்து செல்போனை சிமெண்டு சிலாப் ஒன்றில் வைத்துவிட்டுச் சென்றது.


Raja Kannappan | அடுத்தடுத்த சர்ச்சைகள்.. ராஜ கண்ணப்பனை மாற்றிய முதல்வர் | MK Stalin | Transport




குரங்கிடம் சிக்கிய செல்போன் திரும்ப கிடைத்ததில் இளநீர் வியாபாரி குமாரி இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் புதுவை கம்பன் கலையரங்கம் அருகே தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் பணியில் இருந்த பெயிண்டரின் செல்போனை ஒரு குரங்கு எடுத்துச் சென்று கீழே போட்டது. இதில் செல்போன் நொறுங்கிப் போனது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண