400 கிலோ எடையில் பூதம் உருவத்திலான சாக்லேட் சிற்பம்
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு 400 கிலோ எடையில் பூதம் உருவத்திலான சாக்லேட் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் சாக்லேட் மூலம் தலைவர்களின் உருவம் செய்து அவ்வப்போது வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம். அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர் ரஜினிகாந்த், விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களை சாக்லேட் கொண்டு வடிவமைத்துள்ளனர். தற்போது கிறிஸ்துமஸ் புத்தாண்டு நெருங்கும் நிலையில் அற்புத விளக்கை கையில் வைத்திருக்கும் பூதம் வடிவிலான சாக்லேட் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு புத்தாண்டு வரவேற்பு
2023 ஆம் ஆண்டு புத்தாண்டு வரவேற்கும் விதமாக இங்கு சாக்லேட் பூதம் உருவாக்கப்பட்டுள்ளது. அலாவுதீன் கார்ட்டூன் கதாபாத்திரத்தில் விளக்கை தேய்த்தால், வரும் ஜீனி பூதம் குழந்தைகள் மத்தியில் மிக பிரபலம். இதனை நினைவு கூறும் விதமாக குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக, 'சூக்கா' சாக்லேட் ஷாப்'பில் பூதம் சாக்லேட் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 182 மணி நேரத்தில் 400 கிலோ டார்க் சாக்லேட்டில், 5.5 அடி உயரம் கொண்ட வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் தங்க காசுகளும், மற்றொரு கையில் விளக்கும் ஏந்தியபடி உள்ள பூதம் சிலையை 'ஷெப்' ராஜேந்திரன் தங்கராசு உருவாக்கி உள்ளார். முழுக்க முழுக்க வெளிநாட்டு “டார்க் சாக்லேட்” மூலம் உருவாக்கபட்டுள்ள இந்த சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சிலையை ஜனவரி முதல் வாரம் வரை பார்வையிடலாம் என ஊழியர் கோபி தெரிவித்தார்.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்