விழுப்புரம்‌: பிரதம மந்திரியின்‌ கெளரவ நிதி திட்ட சிறப்பு முகாம்‌ அனைத்து வட்டாரங்களிலும்‌ நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர்‌ சி.பழனி அறிவித்துள்ளார்.


பிரதமரின்‌ கிசான்‌ சம்மான்‌ நிதித்திட்டத்தின்‌ கீழ்‌ விவசாய நிலமுள்ள குடும்பத்திற்கு வேளாண்‌ இடுபொருட்களை வாங்கும்‌ வகையில்‌ 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000/- வீதம்‌ ஆண்டுக்கு ரூ.6000/- மூன்று தவணைகளில்‌ விவசாயிகளின்‌ ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்பட்ட வங்கிக்‌ கணக்கில்‌ நேரடிப்‌ பணப்பரிமாற்றம்‌ மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ இதுவரை 15 தவணைகள்‌ விடுவிக்கப்பட்டுள்ளது.


விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ இதுவரை வங்கிக்கணக்குடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்காத விவசாயிகள்‌ தொடர்ந்து தவணைத்தொகை பெற ஏதுவாக அஞ்சல்‌ சேமிப்பு கணக்கு துவங்க அஞ்சல்‌ துறையுடன்‌ இணைந்து அனைத்து வட்டாரங்களிலும்‌ வேளாண்துறை சார்பாக வரும்‌ ஜனவரி 15 ஆம்‌ தேதி வரை சிறப்பு முகாம்‌ நடைபெற உள்ளது.


மேலும்‌ இச்சிறப்பு முகாம்களில்‌ பி.எம்‌.கிசான்‌ திட்டத்தில்‌ விடுபட்ட தகுதியான பயனாளிகளை சேர்த்தல்‌, ஆதார்‌ விவரங்களை  புதுப்பித்தல்‌, 6-6/6 செய்தல்‌, நிலப்பதிவேற்றம்‌ செய்தல்‌ மற்றும்‌ விவசாய கடன்‌ அட்டைக்கான விண்ணப்பங்களும்‌ வழங்கப்படுகின்றன. மேலும்‌ விவரங்களுக்கு விவசாயிகள்‌ தங்களது கிராம உதவி வேளாண்மை அலுவலர்‌ அல்லது வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்‌ சி.பழனி தெரிவித்துள்ளார்‌.