புதுச்சேரி : தனியார் விடுதியின் அறையில் ரகசிய கேமரா...அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்...போலீசார் வழக்குப்பதிவு

புதுச்சேரியில் தனியார் விடுதியின் அறையில் ரகசிய கேமரா வைத்த விடுதியின் மேலாளர் மற்றும் ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Continues below advertisement

புதுச்சேரியில் தனியார் விடுதியின் அறையில் ரகசிய கேமரா வைத்த விடுதியின் மேலாளர் மற்றும் ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Continues below advertisement

புதுச்சேரி, மேரி உழவர்கரையை சேர்ந்தவர் பிரியன் (25) இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 10 ஆம் தேதி அந்த பெண்ணுடன் அவர் 100 அடி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு சென்று அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த இன்டர்காமில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த கேமராவை கழற்றி ஆதாரங்களுடன்  உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீசார் அந்த விடுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஓட்டல் மேலாளரான தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த ஆனந்து (25) ஓட்டல் ஊழியரான அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த  ஆப்ரகாம் (22) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கேமராவை பொருத்தியது யார்? வேறு அறைகளில் இதேபோல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement