விழுப்புரம்: பங்களிப்பு என்ற பெயரில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளில் அடகு வைக்க கூடாது என்ற தவறுகளும் தோல்விகளும் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தால் சர்வாதிகாரத்தை தமிழக அரசு கட்டவிழ்த்து விடுவதாகவும் பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் இதற்கு காரணம் முதலமைச்சரின் திறமையின்மையே காரணம் என மக்கள் கூறுவார்கள் என்றும் தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கி விட்டதாகவும் பல வழக்குகளில் துப்பு துலங்காமல் உள்ளது, வேங்கை வயல் சம்பவம் நடைபெற்று இரு ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.


அரசு மதுபான கடையில் மதுவிற்கப்பட்டதில் சயனைடு கலந்திருந்த வழக்கில் ஒன்னரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை, திசையன்விளை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கபடவில்லை, திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யபடவில்லை 14 தனிப்படைகள் அமைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை தமிழக காவல் துறை முழுமையாக செயலிழந்துள்ளதாகவும், காவல் துறையின் செயல்பாடுகள் சிதைந்து விட்டது இதற்கு காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் உள்துறை செயலாளர் தான் பொறுப்பு என தெரிவித்தார்.


காவல்துறையில் செயல்படாத அதிகாரிகள், தவறு செய்யும் அதிகாரிகளை தட்டி கேட்க அதிகாரிகள் யாரும் இல்லை, காவல் துறை அதிகாரிகளுடன் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் உயர் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துகிறார். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில் கூடுதல் கவனம் தேவை, சுதந்திரமாக காவல் துறை செயல்பட அனுமதிக்க வேண்டும், டாஸ்மாக் சந்து கடைகளை மூடவேண்டும் இல்லையென்றால் மதுபான கடைகளை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என கூறினார். தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக 4829 டாஸ்மாக் கடைகள் உள்ளன ஒவ்வொரு கடையின் கீழ் 4 முதல் 5 சந்து கடைகள் செயல்படுவதாகவும் இந்த கடைகளில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை நடைபெறுவதாக குற்றஞ்சாட்டினார்.


சட்டவிரோதமாக உள்ள கடைகள் யார் நடத்துகிறார்கள் என காவல் துறைக்கு நன்றாக தெரியும் சந்து கடைகள் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்திருக்க வேண்டும் ஆனால் அதனை செய்வதில்லை என்றும் ஏனெனில் சந்து கடைகள் மூலமாக காவல் துறைக்கு மாமூல் செல்வதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் மதுக்கடைகளை முற்றுகையிடும் போராட்டம் பாமக நடத்தும் என்றும் மெத்தபெட்டமின் என்ற போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், வீடுகளில் ஆய்வகம் நடத்தி மெத்தபெட்டமின் தயாரிக்கபடுவதாகவும் போதை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என ஆட்சி பொறுபேற்ற திமுக அரசில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறினார்.


தவறுகளும் தோல்விகளும் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தால் சர்வாதிகாரத்தை தமிழக அரசு கட்டவிழ்த்து விடுவதாகவும் போராட்டம் நடத்தும் எதிர் கட்சிகள் மீது அடக்குமுறை ஸ்டாலின் அரசு செய்து வருவதாகவும் ஆளும் கட்சிக்கு எதிராக போராடுபவர்களை போராட்டத்திற்கு முன்பே கைது செய்வது என்ன எதிர்கட்சிகள் வாய் மூடி ஜால்ரா தான் ஆளும் கட்சிக்கு போடனுமா என்று கேள்வி எழுப்பினார்.


திராவிட மாடல் ஆட்சியின் நாட்கள் என்னப்பட்டு வருகின்றன சட்டப்பேர்வை தேர்தலில் திமுக அரசு படுதோல்வி அடையும் என்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராடிய செளமியா அன்புமணி கைது செய்யபட்டது கண்டிக்கதக்கது என தெரிவித்தார்.


பங்களிப்பு என்ற பெயரில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளில் அடகு வைக்க கூடாது என்றும் தமிழகத்தில் 500 அரசு பள்ளிகள் தேர்வு செய்யபட்டு தனியார் பள்ளிகள் பள்ளிகளிக்க உள்ளதாகவும் தனியார் பள்ளிகளின் பங்கேற்பினை ஏற்க உள்ளதாக அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது என கூறினார். தனியார் பள்ளிகளின் முதன்மை நோக்கமே அரசு பள்ளிகளை வீழ்த்த வேண்டும் என்பது தான் அப்படி தனியார் பள்ளிகளிடம் உதவி கேட்கும் தமிழக அரசு அடுத்த மருத்துவமனைகள் வளர்ச்சிக்கு மதுபான தொழிற்சாலைகளிடம் உதவி கேட்குமா என கேள்வி எழுபினார்.


தனியார் பள்ளிகளிடம் உதவி கேட்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வேண்டும், சுகமான சுமையில்லாத விளையாட்டுடன் கூடிய கல்வி வேண்டும், பல்வேறு பள்ளிகளில் விளையாட்டு திடலே இல்லை செல்போனில் குழந்தைகள் மூழ்கியுள்ளன. ஒருகையில் உணவு கையில் செல்போன் வைத்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


நகர்புற உள்ளாட்சிகளுடன் கிராம புற உள்ளாட்சிகளை தமிழக அரசு இணைக்க கூடாது. 16 மாநாகராட்சிகள், 41 நகராட்சிகள் விருவுபடுத்த உள்ளன. 296 கிராம ஊராட்சிகள் நகர்புற ஊராட்சிகளுடன் இணைக்க உள்ளன. மத்திய அரசிடம் நிதி வாங்கவே தமிழக அரசு விரிவுபடுத்தவாகவும் இதனால் கிராம புறத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஊரக உள்ளாட்சிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.


பாமக பொதுக்குழுவில் இளைஞரணி தலைவர் அறிவிப்பதில் ஏற்பட்டதில் கருத்து வேறுபாடு இல்லை என்றும் அன்புமணியிடம் பேசி சரியாகி விட்டதாகவும் முகுந்தன் மாநில இளைஞரணி தலைவராக நீடிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். தன்னை விமர்சியுங்கள் எந்த கேள்வி கேட்டாலும் எனக்கு கோவம் வராது, நான் விமர்சிப்பதை நளினமாகவும் நாகரீகமாகவும் கருணாநிதி பதில் அளிப்பார் என ராமதாஸ் கூறியுள்ளார்.