விழுப்புரம்: தாய் பசுவை கண்டுபிடித்து தரக்கோரி கன்று குட்டி கழுத்தில் பதாகை அணிந்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பசுவின் உரிமையாளர் மனு அளித்தார்.


விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே கொட்டியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் பசுமாடு கன்றுக்குட்டியை தனக்கு சொந்தமாக உலகலாம்பூண்டி கிராமத்திலுள்ள நிலத்தில் மாட்டு கொட்டகையில் மாலை கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு மீண்டும் மாட்டுகொட்டகைக்கு சென்றபோது மாட்டுக்கொட்டகையில் இருந்த பசு காணாமல் போய் இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து பசுவை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து கஞ்சனூர் காவல் நிலையத்தில் பசுவின் உரிமையாளர் கோவிந்தன் கடந்த 19 ஆம் தேதி புகார்  அளித்தார்.






அந்த புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் பசுவை திருடி சென்றவர்கள் குறித்து விசாரணை செய்யாமல் கடந்த 14  நாட்களாக காலம் தாழ்த்தி வருவதாக கூறியும் தனது தாய் பசுவை தேடி கண்டு பிடித்து தரக்கோரி கோவிந்தன் மற்றும் அவரது மனைவி சுபாஷினி நூதன முறையில் பசுவின் கன்றின் கழுத்தில் அம்மாவை கண்டுபிடித்து தரக்கோரி பதாகையை கழுத்தில் அணிய வைத்து கன்றுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். கன்று குட்டியுடன் வந்த கோவிந்தனிடம் விரைவில் தாய் பசுவை கண்டுபிடித்து தருகிறோம் என கூறியதை தொடர்ந்து கோவிந்தன் தனது கன்று குட்டியை அழைத்து சென்றார். இச்சம்பவத்தால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.