மத்திய அரசு பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடி ஒதுக்கியுள்ளதற்கு முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
மத்திய அரசு நேற்று (01.02.2023) தாக்கல் செய்துள்ள 2023-2024 ஆண்டிற்கான நிதி-நிலை அறிக்கையானது, இந்தியாவை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் வகையில் அமைந்துள்ளது. தனிநபர் வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பது, வரி செலுத்துவோரிடையே மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. வேளாண் பெருமக்கள் நலன் கருதி கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன் வளத்துறை மேம்பாட்டிற்காக ரூ.20 இலட்சம் கோடி ஒதுக்கியிருப்பது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. உணவு தானிய விநியோகத்திற்கு ரூ 2 இலட்சம் கோடி ஒதுக்கியிருப்பது, பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம், சுகாதாரம், நீராதாரம், மின்சாரம் ஆகியவற்றை உறுதிசெய்ய ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது, முதியோர் வைப்புத் தொகை ரூ.15 இலட்சத்திலிருந்து ரூ.30 இலட்சமாக உயர்த்திருப்பது.
போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற 75 ஆயிரம் கோடி, நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்காக 10 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது. 2014-ஆம் ஆண்டு முதல் புதியதாக அமைக்கப்பட்ட 157 மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே 157 செவிலியர் கல்லூரிகள் அமைக்க இருப்பது போன்ற பல்வேறு பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. "அனைவருக்கும் அனைத்தும்” என்கிற வகையில் சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் சிறப்பான நிதிநிலை அறிக்கையை வழங்கியுள்ள பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்