கொரோனா அதிகரிப்பு காரணமாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 18 ஆம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் இணையதளம் மூலம் மட்டுமே மருத்துவ ஆலோசனை சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இதனால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு ஆலோசனைக்காக வரும் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு கொரோனா பரவும் அபாயத்தை குறைக்க வகையில் நாளை முதல் தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியின் காதை கத்தரிக்கோலால் குத்திய கணவன்
ஜிப்மர் மருத்துவரிடம் ஆலோசனை பெற விரும்பும் நோயாளிகள், www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்ய வேண்டும். மேலும் வரும் நாளை மறுநாள் முதல் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறைக்கும் 50 நோயாளிகள் நேரடி வருகைக்கு அனுமதிக்கப்பட்டு வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு துறையும் முன் பதிவின் அடிப்படையில் மட்டுமே செயல்படும்.
மேலும் சமூகத்திலும், மருத்துவமனையிலும் கொரோனா பரவும் அபாயத்தை குறைக்க ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு முன்னெச்சரிக்கையுடன் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் ஏற்கனவே தடுப்பூசி போடவில்லை என்றால், கொரோனாவுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏனெனில் தடுப்பூசி ஒமைக்ரான் வகை மாறுபாட்டுக்கு எதிராகக்கூட பாதுகாப்பை அளிக்கிறது. அனைத்து அவசர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவுகளும் வழக்கம் போல் இயங்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்