ஆரோவில் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மதுபோதையில் கல்வீசி அரசு பேருந்து கண்ணாடி உடைத்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவு மறைவாக உள்ள மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து அரசு பஸ் ஒன்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தது அப்பொழுது அதில் பயணம் செய்த நான்கு பேர் அரசு பேருந்தில் மது குடித்துவிட்டு ஏறியதாக கூறப்படுகிறது, அவர்கள் நான்கு பேரும் குடிபோதையில் பஸ்ஸை நிறுத்தி சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து பஸ் டிரைவர் கோட்டகுப்பத்தில், இரண்டு முறை டிரைவர் பஸ் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் தனக்கு சிறுநீர் வருவதாக கூறி பஸ்ஸில் வந்த நான்கு பேர் பொம்மையார்பாளையம் அருகே பஸ்சை நிறுத்த சொல்லி சிறுநீர் கழிக்க சென்றனர். டிரைவர் பஸ்ஸை ஓரமாக நிறுத்துவதற்காக செல்ல முற்பட்டபோது திடீரென நான்கு பேரும் பஸ்ஸை கல்லால் கல்வீசி தாக்கி உள்ளனர்.
இதில் பஸ் பின்பக்க கண்ணாடி முழுவதுமாக நொறுங்கியது.இதையடுத்து கோட்ட குப்பை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது, தகவலின் பெயரில் அங்கு கோட்டகுப்பம் போலீசார் வந்தனர். போலீசாரை கண்டவுடன் அங்கிருந்த நாலு பேரும் தப்பி ஓடினர். போலீசார் வெகு தூரம் துரத்திச் சென்று ஒருவரை மட்டும் பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரித்ததில் அவர் சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் வயது 23 என்பதும் இவர் குடிபோதையில் பஸ்ஸை கல்விச்சி தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து ஓட்டுநர் முருகன் கொடுத்த புகாரின் பெயரில் இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மூன்று பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்