புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம், தலைமை செயலகம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர், காவல்துறை தலைமையகம் ஆகியவை உள்ளது. கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்நிலையில் பகலில் பிரெஞ்சு தூதரகத்தின் மீது டிரோன் ஒன்று பறந்தது. இதைக்கண்ட தூதரக ஊழியர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியிலிருந்த தூதரக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.


அவர்கள் விரைந்து சென்று டிரோனை இயக்கிய வரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்கு முன்பாக அந்த நபர் டிரோனை எடுத்துக்கொண்டு மாயமானார். அங்கிருந்த கேமரா மூலம் டிரோனை இயக்கியவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் தூதரகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.


இந்த நிலையில்  புதுச்சேரி காவல்துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. கிராண்ட் பஜார், ஒடியன்சாலை, ஓர்லியன்பேட்டை, முத்தியால்பேட்டை, லாஸ்பெட்,  டி'நகர், மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம், காலாப்பேட் சேதாரப்பேட், வில்லியனூர், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் உள்ளிட்ட 8 காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  ட்ரோன்  கேமெராக்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.