கடலூர் மாவட்டத்தில் உள்ள 228 ஏரிகளில் 161 ஏரிகள் முழுமையாக நிரம்பின

’’கடலூர் நகரில் செல்லக்கூடிய தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 7,523 கனஅடியும், கெடிலம் ஆற்றில் வினாடிக்கு 4,048 கனஅடி தண்ணீரும் கரைபுரண்டு ஓடுகிறது’’

Continues below advertisement

தென்மேற்கு பருவமழை காலத்தில் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பாவிட்டாலும், நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்தது. மேலும் தற்பொழுது கடந்த இரண்டு நாட்களாக மழை இன்றி காணப்பட்டு வருகிறது.

Continues below advertisement

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் மழையால் பெரும்பாலன ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் பல இடங்களில் விளை நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த மழைநீர் இன்னும் வடியாததால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

மேலும் 32 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும், 18 நீர்நிலைகளில் 51 முதல் 75 சதவீதமும், 15 ஏரியில் 26 முதல் 50 சதவீதமும், 2 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் தண்ணீர் உள்ளது. எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வடகிழக்கு பருவமழை தொடங்கிய சிறிது நாட்களிலேயே 161 ஏரிகள் நிரம்பி உள்ளதால், பருவமழை காலம் முடிவதற்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தின் முக்கிய ஆறுகள் ஆன, கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 44 ஆயிரத்து 872 கனஅடி தண்ணீரும், வெள்ளாற்றில் வினாடிக்கு 7,556 கனஅடியும், மேல் பரவன ஆற்றில் வினாடிக்கு 1,096 கனஅடி தண்ணீரும், கீழ்பரவன ஆற்றில் வினாடிக்கு 2,435 கனஅடியும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் கடலூர் நகரில் செல்லக்கூடிய தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 7,523 கனஅடியும், கெடிலம் ஆற்றில் வினாடிக்கு 4,048 கனஅடி தண்ணீரும் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் இந்த ஆறுகளில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள், அணைகள் உள்ளிட்டவை வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக மாவட்டத்தில் உள்ள 228 ஏரிகளில் இது வரை 161 ஏரிகள் நிரம்பி உள்ளன.

Continues below advertisement
Sponsored Links by Taboola