கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீட்டை கடந்த நான்கு நாட்களுக்கு முன் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த படையாட்சியார் பேரவையின் நிறுவன தலைவர் எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ் கூறுகையில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது, இதனால் இட ஒதுக்கீட்டின் மூலம் கல்லூரியில் சேர்ந்த சுமார் 20,000 மாணவர்களின் நிலைமை என்னவாகும் என்று தெரியவில்லை. மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இந்த வழக்கில் அரசு தரப்பில் இருந்து முறையான விளக்கம் அளிக்கப்படாததால் தான் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது என கூறியது வருத்தத்தை அளிக்கிறது.

 

ரத்து செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டினை வன்னியர்கள் மீண்டும் அற வழியில் போராடி மீட்க வேண்டும் இதற்காக எந்த சூழலிலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது. மேலும் இந்த விவகாரத்தில் யாரையும் குற்றம் கூறவில்லை ஆனால் தமிழக அரசு இதனை தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து மீண்டும் இட ஒதுக்கீட்டை பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம் என கேட்டுகொண்டார்.

 

பின்னர் அவரை தொடர்ந்து பேசிய படையாட்சியார் பேரவையின் மாநில தலைவர் எம்.பி. காந்தி,

 

இந்தியாவில் இதுவரை எந்த சாதியினருக்கும் கணக்கெடுப்பு எடுத்து இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை, ஆனால் தற்பொழுது தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீட்டை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது நியாயம் இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல் முதல்வர் அவர்கள் 10.5 % இட ஒதுக்கீட்டை தொடர்ந்து நடைமுறை படுத்தினார் ஆனால் தற்பொழுது அரசாங்கம் அளித்த இட ஒதுக்கீட்டை மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முறையாக தங்கள் வாதங்களை முன் வைக்காத காரணத்தினால் தற்பொழுது இட ஒதுக்கீடு ஆனது ரத்து செய்யப்பட்டு உள்ளது.

 

மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தடை விதித்த பொழுதும் அரசு மேல்முறையீடு செய்து ஜல்லிக்கட்டை மீட்டு தந்தது, அதுபோல் இந்த விவகாரத்திலும் தமிழக அரசு முறையாக வாதாடி இடஒதுக்கீட்டை மீட்டு தரும் என நம்புகிறோம். இன்னும் சிறிது நாட்களில் முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீட்டினை சட்டமாக இயற்ற வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம் என கூறினார். இதுவரை கடலூரில் வன்முறையில் ஈடுபட்டதாக பாமகவை சேர்ந்த 23 கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.