விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக உருவாகியுள்ளது மினி குற்றாலம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நெடிமொழியனூர் பகுதியில் தடுப்பணை அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கன மழையின் காரணமாக நீர் அதிகமாக வருவதால் தற்போது மினி குற்றாலம் போல் மாறியது. இதனால் அப்பகுதிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தளவானூர், எல்லீஸ் சத்திரம் தென்பெண்ணையாறு, பம்பை ஆறுகளிலும் மற்றும் விக்கிரவாண்டி அருகே ஓடும் சங்கராபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர், வானூர், கோட்டக்குப்பம், மயிலம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி சில ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
Mayiladuthurai: எனக்கு விடுப்பு கொடுத்துருங்க! திமுகவினரால் கடிதம் எழுதிய அதிகாரி
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் புதியதாகப் மினி குற்றாலம் உருவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் நெடி மொழியனூர் கிராமம், விழுப்புரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் திண்டிவனத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நெடிமொழியனூர் தடுப்பணையில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது.
இந்த நீர் வரத்து அளவு மினி குற்றாலம் போல் காட்சி அளித்து வருகிறது. தற்போது நெடிமொழியனூர் மினி குற்றாலத்திற்கு விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மினி குற்றாலத்தில் குளித்து வருகின்றனர். புதியதாக தோன்றிய இந்த மினி குற்றாலம் விழுப்புரம் மாவட்டத்தில் பலரது வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தடுப்பணையில் நீர் அதிகமாக வரும் நேரங்களில் குளிப்பதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்