விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் புதிய நீதிமன்ற திறப்பு விழா அழைப்பிதழில் சட்டத்துறை அமைச்சரின் பெயர் இடம்பெறாததை கண்டித்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் மனு அளித்து நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவினை புறக்கணிக்க போவதாக எச்சரித்துள்ளனர். 


கள்ளக்குறிச்சி மாவட்டம் மதூர் பகுதியில் புதியதாக நீதிமன்ற கட்டப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் வருகின்ற 25 ஆம் தேதி புதிய நீதிமன்றம் திறக்கப்படவுள்ளதி. புதிய நீதிமன்ற  நிலையில் திறப்பு விழாவிற்கு அச்சிடப்பட்ட  அழைப்பிதழில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெயர் இடம்பெறாமல் அச்சிடப்பட்டிருக்கிறது.






அழைப்பிதழில் சட்டத்துறை அமைச்சரின் பெயர் அச்சிடப்படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர்கள் அழைப்பிதழில் சட்டத்துறை அமைச்சரின் பெயர் இடம்பெற வேண்டும் என்றும் திறப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்க நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தனர்.  மேலும் நீதமன்ற வளாக கட்டிட திறப்பு விழாவில் சட்டத்துறை அமைச்சரின் பெயர் இடம்பெறவில்லை என்றால் நீதிமன்ற திறப்பு விழாவினை வழக்கறிஞர்கள் புறக்கணிக்கப்போவதாக எச்சரித்துள்ளனர்.