விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இறுதி வாக்காளர் பட்டியல் - 2024 அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் 01.01.2024 தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி 27.10.2023 முதல் 09.12.2023 வரை 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான விண்ணப்ப படிவங்களை பெற்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.


22.01.2024 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்பாக வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் பின்வருமாறு வாக்காளர்கள் உள்ளனர்.






வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம்



  1. வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்,அலுவலகங்கள்

  2. உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள்

  3. நியமன வாக்குசாவடி அமைவிடங்கள். வாக்காளர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவுப் பெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (https://voters.eci.gov.in/) மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விபரம் சரிபார்த்துக்கொள்ளலாம்.


2024-வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணி 22.01.2024 முதல் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களை உரிய படிவத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் கொடுத்துக்கொள்ளலாம். இதுதவிர பொதுமக்கள் இணையதளம் (https://voters.eci.gov.in/) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண்.1950-ஐ தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். எனவே விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் 2024 -வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணி நல்ல முறையில் நடைபெற தேவையான ஒத்துழைப்பு அளிக்கும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.