விழுப்புரம்: தாழ்த்தப்பட்டவர்களுக்கு வன்கொடுமை சட்டம் இருந்தும் அது சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதில்லை, விசிக கொடிகம்பங்களை அகற்றும் அதிகாரிகள் பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க மறுப்பதாக எம்பி ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Continues below advertisement

சாதி ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் எம்பி ரவிக்குமார் தலைமையில் சாதி ஆணவ படுகொலையை கண்டித்தும் ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டு பேசிய விசிக வின் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் சாதி வன்கொடுமை மற்றும் தொடர்ந்து சாதி ஆணவ படுகொலைகளை சுற்றிகாட்டி சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Continues below advertisement

ஏட்டைய்யா நான் பேசும் போது ஏன் வீடியோ எடுக்கவில்லை!

அவர் பேசும் போது காவலர்களை பார்த்து ஏட்டைய்யா நான் பேசும் போது ஏன் வீடியோ எடுக்க வில்லை உங்களது கேமராவில் பிலிம் காலியாகி விட்டதா மற்றவர்கள் பேசும் போது மற்றும் வீடியோ எடுத்தீர்கள் என்னை ஏன் எடுக்கவில்லை நான் முக்கியம்மானவன் இல்லையா என நகைத்தபடி கேட்டார். இதனால் ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.

பஞ்சமி நிலங்களை மீட்டு கொடுங்கள்

அதனை தொடர்ந்து பேசிய எம்பி ரவிக்குமார் உயர்நீதிமன்றம் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்றால் உடனடியாக பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பங்களை அகற்றுகிறார்கள் ஆனால் பஞ்சமி நிலங்களை மீட்டு கொடுங்கள் என எத்தனை முறை அறிவுறுத்தினாலும் அதிகாரிகள் மீட்டு கொடுக்க மறுக்கிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வன்கொடுமை சட்டம் இருந்தும் அது சரியான முறையில் நடைமுறை படுத்துவதுதில்லை, சமூக வலைதளங்களில் பரிதாபங்கள் என கோபி மற்றும் சுதாகர் பேசிய ஆணவ படுகொலை வீடியோ அதிகம் பார்க்கபடுகிறது பகிரப்படுகிறது இதுதான் நமக்கான ஆதரவு என தெரிவித்தார்.