தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பிவிட்டன மீதம் உள்ள ஏரிகளும் தொடர்ந்து நிரம்பி வருகின்றது. இந்நிலையில் இன்றும் நாளையும் மிக கன மழை பெய்யும் எனவும் மேலும் கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பரங்கிப்பேட்டை, ஆலப்பாக்கம், பண்ருட்டி, பாலூர், நெய்வேலி, விருதாச்சலம் பல பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய தற்போது வரை கனமழை பெய்து உள்ளது கடலூரை சுற்றி உள்ள பகுதிகளான செம்மண்டலம், மஞ்சக்குப்பம், சாவடி, கோண்டூர், புதுப்பாளையம், கடலூர் முதுநகர், காராமணிக்குப்பம், நெல்லிக்குப்பம் ஆகிய பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இரவு முதல் காலை வரை தொடர்ந்து பெய்த கன மழையால் கடலூரின் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கடலூரில் உள்ள முக்கிய சாலை அனைத்தும் இரவு முழுவதும் பெய்த தொடர் கன மழையால் நீரில் மூழ்கின இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கடலூரில் உள்ள தேவனாம்பட்டினம் கடற்கரை சாலை, பாரதி சாலை, கடலூர் மைதானம் அருகில் உள்ள சாலை, என அனைத்து சாலைகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது. குறிப்பாக கடலூர் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் துறைமுகம்,குடிகாடு, காரைக்காடு ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மிகவும் பொறுமையாக ஊர்நது ஓட்டி செல்வதை காண முடிந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி-உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆவின் அதிகாரி கைது
இதேபோல் கடலூர் -திருவந்திபுரம் சாலையில் கன மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். மேலும் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்நதுள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1778.05 மி.மீ மழை பொழிந்து உள்ளது. இதில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 128 மி.மீ மழையும், கே.எம். கோவிலில் 124 மி.மீ மழையும், கடலூரில் 99 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.
கார்த்திகை தீபத்திருவிழா - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றம்