விழுப்புரம்: திண்டிவனம் அருகே தேனீ கொட்டியதில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாம்பூண்டி கிராமத்தில் ஏராளமான பெண்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகின்றனர். அதன்படி இன்று பாம்பூண்டு ஏரிக்கரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அப்போது, புதர் பகுதியை தூய்மை செய்ய முயன்றார், அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அங்கு இருந்த வெளியேறிய விஷ தேனீக்கள் அங்கு வேலை செய்து வந்த பெண்களை விரட்டி விரட்டி கொட்ட துவங்கியது. இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்தனர். இதன் காரணமாக அவர்கள் வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த மற்றவர்கள் அனைவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் படுக்கை கிடைக்காமல் காயமடைந்தவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தகவல் அறிந்த மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் நேரில் சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்