தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான்; யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் பொன்முடி
தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் அதை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் பொன்முடி
Continues below advertisement

முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி
விழுப்புரம்: தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் அதை யாராலும் அசைக்க முடியாது. மும்மொழி கொள்கையை தமிழகத்தில் புகுத்த முடியாது என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.02.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில், கூட்டுறவுத்துறை சார்பில், சாலை அகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மற்றொரு வரலாற்று சிறப்பு நிகழ்வாக, அனைவருக்கும் குறைந்த விலையில் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் மற்றும் பிற மருத்துகள் கிடைக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், 15.08.2024 அன்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
அதனடிப்படையில், இன்றைய தினம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், சாலை அகரம் ஊராட்சியில், கூட்டுறவுத்துறை சார்பில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm /D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருத்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் விழுப்புரம் மாவட்டத்தில் 22 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 01 தொழில்முனைவோர் என மொத்தம் 23 முதல்வர் மருந்தகங்கள் அமைத்திட ஒப்புதல் பெறப்பட்டு மார்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை சார்பில், சாலை அகரம், கண்டமங்கலம், மேல்வைலாமூர், விழுக்கம், சித்தலிங்கமடம், அரகண்டநல்லூர், இரும்பை, மரக்காணம், விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, விக்கிரவாண்டி, கோணை, அன்னியூர், காணை, சாத்தாம்பா, ஆவணிப்பூர், வளவனூர், நேமூர், கண்டாச்சிபுரம், கெடார், ஜி.செம்மேடு, ஆலங்குப்பம், செஞ்சி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக முதல்வர் மருந்தகங்களும், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில், தொழில் முனைவோர் திவ்யா சின்னகிருஷ்ணன் வாயிலாக முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3.00 இலட்சம் வழங்கப்படுகிறது இதில் ரொக்கமாக ரூ.1.50 இலட்சம் முதல்வர் மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவுவதற்கு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1.50 இலட்சம் மதிப்பிற்கு மருந்துகள் வழங்கப்படுகிறது.
மேலும், முதல்வர் மருந்தகம் அமைக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு மானியம் ரூ.2.00 இலட்சம் வழங்கபடுகிறது. இதில் ரொக்கமாக ரூ.1.00 இலட்சம் முதல்வர் மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குனிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவுவதற்கு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1.00 இலட்சம் மதிப்பிற்கு மருந்துகள் வழங்கபடுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கிடும் விதமாக இன்றைய தினம் திறந்து வைத்துள்ள முதல்வர் மருந்தகத்தின் மூலம் நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற நோய்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வாங்கி பயன்பெறலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் முதல்வர் மருந்தகத்தின் மூலம் மருந்துகள் வாங்கி பயன்பெற வேண்டும் என அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் அதை யாராலும் அசைக்க முடியாது மும்மொழி கொள்கையை தமிழகத்தில் புகுத்த முடியாது ஒன்றிய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதல்வரே தெரிவித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.