விழுப்புரம்: தமிழக முதலமைச்சருக்கு யார் யாரெல்லாம் தொந்தரவு அளித்தாலும் எல்லாத்தையும் தூக்கி எரிந்து விட்டு மக்களுக்கான ஆட்சியை தமிழக முதல்வர் செய்து வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் 1432 பசலி வருவாய் தீர்வாயம் நிறைவு விழா விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, எம் பி ரவிக்குமார், திமுக எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.


அதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழக முதலமைச்சராக பொறுபேற்றதிலிருந்து பல்வேறு நலதிட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாகவும், கலைஞர் கருணாநிதியின் வழியில் ஆட்சி செய்து வருவதாக தெரிவித்தார். பொதுமக்கள் மனநிறைவோடு இருக்க வேண்டும் என்பதால் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தகுதி உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளார்.


யார் யாரெல்லாம் முதலமைச்சருக்கு தொந்தரவு அளித்தாலும் எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு மக்களுக்கான ஆட்சியை முதல்வர் செய்து வருவதாகவும், தமிழக முதலமைச்சர், முதல் பட்டதாரி, தமிழ் வழியில் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுமென மகத்தான அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண