விழுப்புரம்: தமிழகத்தில் மூனு நம்பர் லாட்டரி விற்பனை தலைவன் முருகானந்தத்தை விழுப்புரம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கைது செய்யப்பட்ட லாட்டரி தலைவன் காவல் துறை உதவி ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


3 நம்பர் லாட்டரி விற்பனை தலைவன் கைது


விழுப்புரம் நகர பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மூனு நம்பர் லாட்டரி விற்பனை செய்யபடுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து விழுப்புரம் ராமலிங்கம் நகர் பகுதியை சார்ந்த பழனி என்பவரை ஒரு மாதங்களுக்கு முன் விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் தடை செய்யப்பட்ட மூனு நம்பர் லாட்டரி தமிழகம் முழுவதும் சங்கிலி தொடர் போன்று செங்கல்பட்டினை சார்ந்த தொழிலதிபர் முருகானந்தம் மூலமாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து முருகானந்தத்தை போலீசார் கடந்த ஒரு மாதமாக தேடி வந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் சென்னையில் விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.


சப் - இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் கொடுத்தாக வாக்குமூலம் 


கைது செய்யப்பட்ட மூனு நம்பர் லாட்டரி தலைவனும் தொழிலதிபருமான முருகானந்தத்தை விழுப்புரம் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்ததில் தமிழகம் முழுவதும் 325 கிளைகளாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வருவதாகவும், இதற்காக காவல் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வருவதாகவும் விழுப்புரத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் நான்கு பேருக்கு லஞ்சம் மாதம் மாதம் 30 ஆயிரம் வழங்குவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து முருகானந்தத்தை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையிலடைத்தனர்.


துறை ரீதியான நடவடிக்கை 


லாட்டரி தலைவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் குற்றஞ்சாட்டப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்களிடம் விசாரனை செய்து வருகிறார். மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு முக்கிய புள்ளியான முருகானந்தத்தை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண