விழுப்புரம்: விழுப்புரத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மணி மண்டபம் விரைந்து அமைக்கப்படுமெனவும் மக்களுடைய முதல்வர் ஸ்டாலினின் திட்டம் வெற்றி பெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டதொடரில் விழுப்புரத்தில் சமூக நீதி இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு நினைவு மணி மண்டபம் மற்றும் திமுகவிற்கு உதயசூரியன் சின்னம் வழங்கிய ஏ கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்வருடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் உடனடியாக மணி மண்டபம் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டதின் பேரில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன் மணி இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு 5.45 கோடி மதிப்பீட்டிலும், உதயசூரியன் சின்னம் தந்த ஏ கோவிந்தசாமிக்கு 3.75 கோடி மதிப்பீட்டில் ஜானகிபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மணி மண்டபம் அமைய உள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டனர்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, மணி மண்டப பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டதின் பேரில் இன்று ஆய்வு செய்து பார்வையிட்டதாகவும் விரைந்து பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்படுமெனவும் இதனை தமிழக முதலமைச்சர் நேரில் வந்து திறந்து வைப்பார் என தெரிவித்தார். தமிழக ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து நீக்கியது குறித்த அறிவிப்புக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, மக்கள் முதல்வராக உள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு தெளிவாக பதில் அளித்துள்ளதாகவும் மக்களுடைய முதல்வரின் திட்டம் வெற்றி பெறும் என கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்