விழுப்புரம்: சென்னையில் வடகிழக்கு பருவமழை நீர் வடிவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசியலாக்க கூடாது அவரும் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி ஆய்வு


விழுப்புரம் நகரபகுதியில் தாழ்வான பகுதியான தாமரை குளம் பகுதியில் ஒவ்வொரு மழையின் போது சாலைகளில் மழைநீர் தேங்குவதாலும் வீடுகளில் மழை நீர் செல்வதால் அந்த பகுதியில் உள்ள வாய்க்காலை தூர்வாரும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வாய்க்கால் தூர்வாறும் பணியினை வனத்துறை அமைச்சர் பொன்முடி வி ழுப்புரம் ஆட்சியர் பழனி ஆய்வு செய்தனர்.


அதனை தொடர்ந்து பேட்டியளித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி 


தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மழை பாதிப்பு இல்லை என்றும் மழை நீரானது சென்னையில் பெருமளவு வடிந்துவிட்டதாகவும் இதற்கு முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் மழை நீர் வடிந்துள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துத்துறைகள் மூலம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. நேற்றைய தினம் கடலோர பகுதிகளான மரக்காணம் மற்றும் கோட்டக்குப்பம் பகுதிகளில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், விழுப்புரம் நகராட்சியில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக கடந்த ஒருவாரமாக கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்ட நிலையில் தொடர் மழை பெய்ததன் காரணமாக எந்த வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.


அதனடிப்படையில் இன்றைய தினம், விழுப்புரம் நகராட்சியில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக, தாமரைக்குளம் பகுதியில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தாமரைக்குளம் வழியாக கோலியனூர் ஏரிக்கு செல்லும் மழைநீர் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


எதிர்க்கட்சித் தலைவர் இதில் அரசியல் செய்யக்கூடாது...


கடந்த கால ஆட்சியில் இது போன்று மழை நீர் வடியவில்லை என தெரிவித்தார். சென்னையில் பருவமழை தண்ணீர் வடிவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசியலாக்க கூடாது அவரும் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.