”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!

Continues below advertisement

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விழுப்புரம் சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Continues below advertisement

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மக்களுக்கான உதவிகளை செய்யவும் மாவட்ட ஆட்சியருடன் வனத்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் சென்றார், இருவேல் பத்து பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற அவருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறத். அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் வெள்ளம் வந்த பிறகும் போதிய உதவிகள் கிடைக்கவில்லையென்றும் அவர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக நிர்வாகியும் முன்னாள் எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் மீது அப்பகுதி மக்கள் மழை சகதியை வாரி எறிந்தனர். 

இது அவர்களது வெள்ளை உடையில் பட்டதால், அவசர அவசரமாக அங்கிருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கிளம்பிச் சென்றனர்

Continues below advertisement