அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமை‌ச்ச‌ருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக எம்பி சி.வி. சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழா 


தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமை‌ச்ச‌ருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் திரு உருவப்படத்திற்கும், சிலைக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் திண்டிவனம் காந்தி சிலை அருகே மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் தலைமையில் எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் நடைபெற்றது. இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், விழுப்புரம்  மாவட்ட செயலாளருமான சி.வி சண்முகம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிக்கை :


5 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள்


அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் 5 நாட்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் நடைபெற உள்ளன. எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் 17-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதிமுக சார்பில் 19, 20 ,21, 27, 28ஆகிய 5 நாட்களில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள், கட்சி ரீதியில்செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலும், அதிமுக செயல்பட்டுவரும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.