மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா - பக்தர்களே விழா விவரம் இதோ

விழுப்புரம் : 19ம் தேதி கோலாகலமாக தொடங்கும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலையில் கோபால விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகளும். இரவு 9 மணிக்கு கொடியேற்றம், அதன் பிறகு சக்தி கரகமும் நடைபெறும். 19-ந்தேதி, காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மயானக்கொள்ளை விழாவும், இரவு ஆண் பூதவாகனத்தில் சாமி வீதி உலாவும்,

Continues below advertisement

20-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் தங்கநிற மரப் பல்லக்கிலும், இரவு பெண்பூத வாகனத்திலும், 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடக்கிறது.22-ந் தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேல் தீமிதி விழாவும், இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 23-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு யானை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

25-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும், 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் சாமி வீதிஉலாவும், 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 2-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் சாமி வீதி உலா, இரவு கும்பப் படையல், காப்புகளைதல், கொடியிறக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement