புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை அன்று அனைத்துவகை மதுபான கடைகள், மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என்று  மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.


புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணிக்கு அலுவலா்கள் உள்ளிட்ட 631 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணும் 5 மையங்களிலும் 1,500 காவலர்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம்தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் உள்ளிட்ட 26 போ் போட்டியிடுகின்றனா்.


தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. தோ்தலில் வாக்களிக்க 10,23,699 போ் தகுதி பெற்றிருந்தும், 8,07,724 வாக்காளா்கள் மட்டுமே தங்கள் வாக்கை பதிவு செய்திருந்தனா். அதன் அடிப்படையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே ஆகிய 4 பிராந்தியங்களையும் சோ்த்து மொத்தம் 78.90 சதவீ வாக்குகள் பதிவாகியது. புதுச்சேரி மாவட்டத்தில் மட்டும் 79.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. பிராந்திய வாரியாக புதுச்சேரியில் 2 மையங்களிலும், காரைக்கால், ஏனாம், மாஹே ஆகியவற்றில் தலா ஒரு மையம் என மொத்தம் 5 மையங்களில் நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் 5 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 1,002 அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.


வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுமதி. மாலை 7 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியும் 3 சுற்றுகளாக வாக்கு எண்ணப்படும். மேலும் புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை அன்று அனைத்துவகை மதுபான கடைகள், மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.