விழுப்புரம்: எந்த கட்சி வேறுபாடின்றியும், விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கபடுமென அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நகராட்சியில் கலைஞர் உரிமை தொகைக்கான விண்ணப்பிக்கும் முகாமில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி, திமுக எம் எல் ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் இன்று ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, திமுக நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எந்த கட்சியும் வேறுபாடின்றியும், ஜாதி மத வேறுபாறுபாடின்றி கலைஞர் உரிமை தொகையை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளதால் அனைவருக்கும் வழங்கப்படுமென அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமென கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் குடும்ப அட்டைதாரர்கள் 6,18,445 பேர் உள்ள நிலையில் முதல் கட்டமாக கலைஞர் கருணாநிதி மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க 1027 இடங்களில் சிறப்பு முகாம்கள் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக நடைபெறும் முகாமில் விழுப்புரம் மாவட்டத்தில் 3,41,250 குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொள்கின்றனர். இரண்டாம் கட்டமாக 690 முகாம்களில் 2,77,236 குடும்ப அட்டைதாரர்கள் பங்கு பெறும் முகாம் 5.8.23 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்