விழுப்புரம்: ஆளுநர் தமிழிசை நிழல் முதலமைச்சர் போல் செயல்படுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை அவமதிக்கும் செயல் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மகாராஜபுரத்திலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கட்டண முறையை ரத்து செய்யவேண்டுமென விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை கொச்சை படுத்தி விழுப்புரம் எம்பிக்கு இங்கு என்ன வேலை  என ஆளுநர் தமிழிசை பேசியிருந்தார். அதன் பிறகு தனது கருத்தை தமிழிசை மாற்றிக்கொண்டார். அதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை சரியாக செலவு செய்தாலே நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழல் இருக்காது. ஜிப்பர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கபடாது என இயக்குனரோ, ஆளுநரோ இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.ஜிப்மர் புதுச்சேரிக்கான மருத்துவமனை கிடையாது, அனைத்து மாநில மக்களும் சிகிச்சை பெறும் மத்திய அரசின் மருத்துவமனை” என்று கூறினார்.


விழுப்புரம் எம்பிக்கு இங்கே என்ன வேலை என துணை நிலை ஆளுநர் தமிழிசை கேட்டதற்கு பதில் அளித்த தரும் விதமாக ஜிப்மரில் அதிக அளவு விழுப்புரம் மாவட்டம் மக்கள் சிகிச்சை பெற்று வருவதால் எனக்கு அதில் அக்கறை உள்ளது. ஜிப்மருக்கான நிதியை உயர்த்தி தரவேண்டும் என நாடாளுமன்றத்தில் நான் கோரிக்கை விடுத்த பின்னரே நிதி உயர்த்தப்பட்டது. துணைநிலை ஆளுநர் மருத்துவமனைக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர கட்டணம் உயர்வுக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என ரவிக்குமார் கூறினார்.


புதுச்சேரி ஆளுநர் நிழல் முதலமைச்சர் போல் செயல்படுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை அவமதிக்கும் செயல் எனவும் தங்களை போன்றவர்களுக்கு  மக்கள் தேர்வு செய்து பணி செய்ய வாய்ப்பு வழங்கவில்லை என அவரே வேதனை தெரிவித்துள்ளதாக கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண