தமிழகம் முழுவதும் தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, இன்று திங்கட்கிழமை முதல் மாா்ச் 19 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகிக்கப்படுகின்றன. அதன் படி கடலூர் மாவட்டத்தில் குழந்தைகளும், பெண்களும் இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதற்கு குடல்புழு தொற்று ஒரு காரணமாக உள்ளது. எனவே இதைத் தடுக்கும் பொருட்டு ஆண்டுக்கு இருமுறை குடல்புழு நீக்கம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி மாா்ச் 14 நேற்று முதல் 19-ஆம் தேதி வரை குடல்புழு நீக்க மாத்திரைகள் (அல்பெண்டசோல்) வழங்கப்பட உள்ளது. விடுபட்டவா்களுக்கு மாா்ச் 21-ஆம் தேதி வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரையுள்ள 6.39 லட்சம் பேருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 2.24 லட்சம் பேருக்கும் (கா்ப்பிணி, பாலூட்டும் தாய்மாா்கள் நீங்கலாக) மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.1 முதல் 2 வயது வரை அரை மாத்திரையும், 2 முதல் 30 வயது வரை ஒரு மாத்திரையும் சாப்பிட வேண்டும். அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்பெண்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்.
இந்த நிகழ்ச்சியினை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் தொடங்கி வைத்தனர். இதில் அரசு பள்ளி மாணவிகள் அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடக்கி வைத்த பின், இந்த குடற்புழு நீக்க மாத்திரைகளை அனைவரும் உட்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
பின்னர் பேசிய மேயர் தன்னை மேயர் சுந்தரி ராஜா ஆக்கிய தனது கடலூர் பொது மக்களுக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் எனது நன்றியினை பெரிதும் தெரிவித்து கொள்கிறேன் எனவும், அதன் காரணமாக தான் தற்பொழுது தான் படித்த பள்ளிக்கே மேயராக வந்து தலைமை ஏற்று இந்த நிகழ்வினை நடத்துவது பெரும் மகழிச்சி அளிக்கரது என நெகிழ்ந்து பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் குடற்புழு நீக்க மாத்திரைகளை அனைவரும் உட்கொண்டு, ஆசிரியர்கள் சொல்லும் சொல்லும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என கேட்டுகொண்டார்.