விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வேண்டுகோள்.

Continues below advertisement

இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்!

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் குளம் 2.82 கோடி செலவில் புனரமைப்பு பணி நடைபெறவுள்ளது. இதற்கான பணியை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். முதல்வர் நிகழ்ச்சி நேரலை தொடங்கி சிறிது நேரத்திற்கு பிறகு, தாமதமாகவே மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய நடத்துற அதிகாரிகள் வருகைதந்தனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான்.,

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகள் நவம்பர் நான்காம் தேதி முதல் நடைபெற்று வருகிறது டிசம்பர் நான்காம் தேதி வரை நடைபெற நமது மாவட்டத்தில் 17 லட்சத்து 27 ஆயிரத்து 490 வாக்காளர்கள் உள்ளனர் . இவர்களுக்கு பணிவங்கள் விநியோகிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது 72 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது நமது மாவட்டத்தில் அடுத்த இரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் டிசம்பர் 4 ஆம் தேதி வரை அவகாசம் இருந்தாலும் கூட கனமழை காரணமாக இன்றும் நாளையும் இரு தினங்களை படிவங்களை வாக்குச்சாவடி முகரிடம் அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

Continues below advertisement

2000 பணியாளர்கள் SIR பணியில் ஈடுபட்டுள்ளனர்

அரசு ஊழியர்கள் தன்னார்வலர்கள் என 2000 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வாக்குச்சாரி முகவரி தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை ஒப்படைக்க கேட்டுக் கொள்கிறோம். 2002ல் வாக்காளர் பட்டியல் விவரம் கண்டறிய இயலவில்லை என்றால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. வாக்காளர்கள் தாய், தந்தை பெயர் மற்றும் தொலைபேசியை எழுதிக் கொடுத்தால் போதும் அதிகாரிகளே விவரங்களை எடுத்துக் கொள்வார்கள். 

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீர்நிலைகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது எனவே தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஆய்வு செய்து கரைகளை வலுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

96.56 சதவீதம் விண்ணப்பங்கள் விநியோகம்

பொதுமக்களுக்கு விண்ணப்பம் வராமல் இருந்திருந்தால் வாக்குச்சாவடி முகவரி தொடர்பு கொண்டு அவர்களுக்கான படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். மாவட்டத்தில் 96.56 சதவீதம் விண்ணப்பங்கள் விநியோகம் பட்டுள்ளது. 72% விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. கடினமான பணி உள்ளதா பல்வேறு துறைகளில் இருந்தும் தன்னார்வலர்கள் கொண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.