தமிழகத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரும்பாலன ஏரிகள் குளங்கள் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்தது. மேலும் தற்பொழுது கடந்த இரண்டு நாட்களாக மழை இன்றி காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் மழையால் பெரும்பாலன குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் மழையின் காரணமாக ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் பல இடங்களில் விளை நிலங்களுக்கு உள்ளும் தண்ணீர் புகுந்து உள்ளது, மேலும் ஒரு சில இடங்களில் மழைநீர் இன்னும் வடியாததால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடலூர் மத்திய பேருந்து நிலையம் அருகே கடலூர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதிகளை இணைக்கும் இரயில்வே சுரங்கப்பாதை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. இந்த இரயில்வே சுரங்கப்பாதையில் தொடர்ந்து மழை காலங்களில் மழை நீர் தேங்கவுதால் குளம் போல் காட்சி அளிக்கும் ஆனால் மக்களின் பலதரப்பட்ட போராட்டத்திற்கு பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்பொழுது வடிகால் வசதி செய்யப்பட்டு தற்பொழுது பெய்த தொடர் மழையில் கூட மழை நீர் தேங்காமல் இருந்ததை காண முடிந்தது. ஆனால் தற்பொழுது பெய்த தொடர் மழையால் நிலத்தடி நீர் மட்டம் பல்வேறு இடங்களில் உயர்ந்து வருகிறது இதன் காரணமாக இரயில்வே சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர்கள் பல்வேறு பகுதிகளில் மற்றும் சுரங்கப்பாதையின் சாலை இருந்தும் திடீர் என தண்ணீர் ஊற்று எடுக்க தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர்கள் பலம் இழக்கும் அபாயம் ஏற்படுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் மழையின் தாகமானது அதிகமாகக் கூடும் என்பதால் சுவர்கள் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளது, ஆகவே நிலைமை மேலும் மோசம் ஆவதற்கு முன்பாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த இரயில்வே சுரங்கப்பாதையைப் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊற்று சுறப்பதினை சரி செய்ய வேண்டும் எனவும் இல்லை என்றால் சுரங்கப்பாதையில் பயணம் செய்யும் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும் நிலை உள்ளது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.