விழுப்புரம் மாவட்ட, திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சாதனா மற்றும் சத்யா ஆகியோர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் அரசு பள்ளியில் கொரோனா விடுமுறையின் போது சத்தியா மற்றும் சாதனா ஆடியோர் ஆசிரியர் ஆரோக்கியராஜ் என்பவருடன் திருக்குறளை பயின்று சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.


Annamalai As Actor : நடிகராக அவதாரம் எடுத்த அண்ணாமலை ! சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சாதனாவும் சத்யாவும் திருக்குறளில் அதிகாரம், முதல் சீர், இறுதி சீர் இப்படி எதைக் கேட்டாலும் சொல்லும் திறமை பெற்றவர்கள். கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு மணி நேரம் 40 நிமிடத்தில் கூறியவர்கள், தற்போது கடுமையான முயற்சிக்குப் பிறகு 13 நிமிடத்தில் அனைத்து திருக்குறளையும் வாசித்து வருகின்றனர். இதனால் உலக சாதனைக்கு தயாராகி வரும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என ஆசிரியர் வேண்டுகோள் விடுத்தனர்.


இது குறித்து ஆசிரியர் ஆரோக்கியராஜ் கூறியதாவது :-  கடந்த பிப்ரவரி  மாதம் மாவட்ட அளவில் இரண்டு மாணவிகளும் வெற்றி பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் திருக்குறள் முற்றோதல் போட்டியில்  முதலிடம் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சான்றிதழ் ஊக்கத்தொகையும் பெற உள்ளனர். உலக சாதனை முயற்சியில் ஈடுபடுவதற்காக 1330 திருக்குறளையும் மிக விரைவாக கூறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாதனா 13 நிமிடத்தில் அனைத்து குரல்களையும் கூறும் திறமையும், சத்தியா 25 நிமிடத்தில் அனைத்து திருக்குறளையும் கூறும் திறமையும் பெற்றுள்ளனர்.




எந்த திருக்குறளை கேட்டாலும் என் மற்றும் அதிகாரம் கூறினாலும் அந்த திருக்குறளை கூறும் திறன் பெற்றுள்ளனர். ஆகையால் அரசு மாணவிகளுக்கு உலக சாதனை புரிய உள்ளனர். இந்த நிலையில், நாளை அப்பள்ளியில் திருக்குறளில் இரட்டை உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது. நாளைய நிகழ்வில் அமைச்சர் மஸ்தான், மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலையில் இரண்டு மாணவிகள் திருக்குறள் ஒப்புவிக்கும் சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண