விழுப்புரம்: விழுப்புரத்தில் தக்காளி விலையை தொடர்ந்து காய்கறி சந்தைகளில் இஞ்சியின் விலை கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், வியாபாரிகள் பொதுமக்களும் பாதிப்படைந்துள்ளனர். ஐந்து வருடங்களுக்கு பிறகு இஞ்சியின் விலை உச்சத்தை அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாகவே அத்தியாவசிய காய்கறிகளின் விலை ஏற்றம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். நான்கு தினங்களாகவே விழுப்புரத்தில் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இஞ்சி கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் கிலோ சில்லறையாக 400 ரூபாய்க்கு விற்பனை விற்பனை செய்யப்படுகிறது. மைசூர் பகுதியிலிருந்து விழுப்புரத்திற்கு குறைவான அளவிலையே இஞ்சி வரத்து உள்ளதால் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது இன்றைய தினம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி மூட்டை 55 கிலோ கொண்டது 15 ஆயிரத்திற்கு வரத்து உள்ளதால் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இஞ்சி விளைச்சல் உள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால் இந்த விலையேற்றம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளிவிலையை தொடர்ந்து இஞ்சியின் விலையேற்றம் பொதுமக்களிடையே பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் காய்கறி சந்தைகளில் பச்சை மிளகாய் கிலோ 120 ரூபாய்க்கும் தக்காளிக்கு 100 ரூபாய்க்கும் இஞ்சி 350 லிருந்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்