கடலூர் முதுநகரில் தனியார் திருமண மண்டபத்தில் தனியார் தொழிற்சாலை சார்பில் மக்களுக்கு அன்னதான திட்ட துவக்கவிழாவில் கலந்து கொண்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றி திட்டதினை துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், கடலூர் சிப்காட் பகுதிகளில் பல இரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.  இதில் பல தொழிற்சாலைகள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர் ஆனால் தொழிற்சாலை அமைந்துள்ள சிப்காட் பகுதி மற்றும் சுற்றுவட்டரா கிராம மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை தேவைகளை கூட செய்ய மறுக்கிறது.

 



 

இந்த நிலையில் தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நாள் தோறும் அன்னதனாமாக உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதன்படி இந்த தொழிற்சாலை தற்பொழுது 2 வருடத்திற்கு தனியார் மண்டபத்தில் மதியம் வேலை உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. எனது கோரிக்கையினை ஏற்று இந்த அன்னதான திட்டத்தினை தொடங்கியதற்கு நன்றி. மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் போது கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்கள் வேலை இழந்து வருவாய் இல்லாமல் கடுமையான அவதிப்பட்டனர். அந்த வேலையில் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள லாபம் ஈட்டுகின்ற பல தொழிற்சாலைகள் மக்களுக்கு உதவ முன் வரவில்லை, பெயரளவு கூட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை இது எனக்கு மன வருத்தத்தை அளித்தது அதுமட்டுமின்றி இதற்கு எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.



 

இனி வரும் காலங்களில் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலை நிர்வாகம் சுற்றியுள்ள மக்களுக்கு சிஎஸ்ஆர் நிதி மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும், மேலும் தங்களது தொழிற்சாலைகளை சுற்றியுள்ள கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். மேலும் கொரோனா தொற்று பரவலானது குறைந்துள்ளது என்றாலும் மக்கள் முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும், மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்து செலுத்திக்கொள்ள வேண்டும்.

 



 

தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதுமட்டுமின்றி அனைத்து ஊர்களில் உள்ள கட்சி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்த வேண்டியதின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அனைவரையும் தடுப்பூசி செலுத்துவதனை உறுதி செய்தல் வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் வந்திருந்த பொதுமக்களுக்கு உணவு பரிமாறி அன்னதான திட்டத்தினை தொடங்கி வைத்தார்.