விழுப்புரம்: துர்கா ஸ்டாலின் சனாதானத்தின் வழிகாட்டியாக இருப்பதாகவும், அம்மா பேச்சை கேட்காத அமைச்சர் உதயநிதியை எல்லோரும் சேர்ந்து திருத்த வேண்டும் என மன்னார்குடி ராமானுஜ ஜியர் தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் நகரபகுதியான கிழக்குபாண்டி சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 43ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மன்னார்குடி செண்டலங்கார சென்பக ராமானுஜ ஜியர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என கூறுவது சின்னபசங்க ஆயிரத்தெட்டு பேசுவார்கள் முதலில் அவர் வீட்டிலையே சனாதனத்தை ஒழிக்கனும் அமைச்சரின் தாயார் துர்கா ஸ்டாலினோ சனாதன தர்மத்தின் வழிகாட்டியாக நெற்றில் குங்குமம், கழுத்தில் தாலி, காலில் மெட்டி அணிந்து கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து பேசிய அவர், அம்மா பேச்சை கேட்காத அமைச்சர் உதயநிதியை எல்லோரும் சேர்ந்து திருத்த வேண்டும் என்றும் தமிழ் மொழிக்கு இணையானது தான் சமஸ்கிருத மொழி அது எந்த மொழியிலையே வேண்டுமானாலும் எழுதலாம் பொதுவானது எனக் கூறினார். சமஸ்கிருதத்தையும் நாட்டை பற்றி தெரிந்து கொண்டால் அதற்கு எழுத்து வடிவம் இல்லை என அமைச்சர் பொன்முடி கூறியிருக்க மாட்டார். சனாதனத்தை அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக பேசுவதாகவும் சனாதான தர்மத்தை பேசும் அரசியல்வாதிகள் எந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் பேசுகிறார்கள் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் சனாதான தர்மத்தை விட்டு வந்து இருக்கிறார்களாக என கேள்வி எழுப்பினார். சனாதன தர்மத்தை பேசுபவர்கள் உள்ளுக்குள் சனாதன தர்மத்தையும் வெளியில் இல்லை என கூறிக்கொள்வதாகவும், அரசியலுக்காக நரி வந்து புலி தோலை போர்த்தி கொண்ட மாதிரி சனாதன தர்மத்தை இவர்கள் பேசுவதாக ராமானுஜ ஜியர் குற்றஞ்சாட்டியுள்ளார்.