புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்குவதையெட்டி மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு, போராட்டத்தில் ஈடுபடும் மின்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்மா சட்டத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது.

Continues below advertisement


தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் கடந்த 28-ந்தேதி முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக மின்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இருப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக இன்று போராட்டத்தில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்படும் மின் வினியோக பாதிப்புகள் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு சரிசெய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவன என்ஜினீயர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  





மின் வயர்களை துண்டித்தும், பியஸ் கேரியர்களை பிடுங்கியும் செயற்கையாக மின் வெட்டு செய்வதை தடுக்கும் வகையில் மரப்பாலம், துத்திப்பட்டு, தொண்டமாநத்தம், வெங்கட்டாநகர், பாகூர், வில்லியனூர் ஆகிய துணை மின்நிலையங்களில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செயற்கை மின் தடையில் ஈடுபட்டவர்களை கண்டறிய அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மரப்பாலம் துணை மின்நிலையத்துக்குள் புகுந்து ஒப்பந்த ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மின்சாதன பொருட்களை் சேதப்படுத்திய சுப்பிரமணி, செந்தில், செல்வம், ரவி ஆகிய மின்துறை ஊழியர்கள் மீது முதலியார்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மின் வினியோக பிரச்சினையால் சாலைகளை மறித்து போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் துணை ராணுவ படை வரவழைக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து புதுவைக்கு 2 கம்பெனி படையினர் வந்துள்ளனர். நகர பகுதியில் நேற்று மாலை கொடி அணிவகுப்பு நடத்தினர். இதன்பின் அனைத்து துணை மின் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மேலும்,புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்குவதையெட்டி மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு, போராட்டத்தில் ஈடுபடும் மின்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்மா சட்டத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது.