உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஓமிக்ரான் எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனாவும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன, தமிழகத்திலும் இந்த வருடம் தொடங்கியது முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது மேலும் ஞாயிற்று கிழமை தோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது .



 

இதே போல் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை இலக்கிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, கடந்த 1 ஆம் தேதி வெறும் 5 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பத்து நாட்களில் பல மடங்கு உயர்ந்து, நோய் பரவல் வேகமெடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 308 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பின்னர் நேற்று முன்தினம் ஒரே நாளில் 353 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இப்படி இருந்து வந்த சூழலில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 305 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 



 

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலன முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படடன, பின்னர் ஊரடங்கு காரணமாக கடலூரில் மதுபான கடைகள் திறந்து இல்லாத காரணத்தினால், கடலூர் தமிழக பகுதியில் இருந்து புதுவை மாநிலத்திற்கு குடிமகன்கள் மது குடிக்க நடந்தே பயணம் மேற்கொண்டனர். 

 



 

கடலூர் சாவடி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கடந்து புதுவை பகுதிக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடிமகன்கள் நடைபயணமாக படையெடுக்க தொடங்கினர். இதனை அறிந்த காவல் துறையினர் சாவடி அருகே உள்ள சோதனைச் சாவடிகள் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனை செய்து வருகின்றனர் இந்த நிலையில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பல கரையோரப்பகுதிகளில் வழியாக குடிமகன்கள் காவல் துறையினரை திசை திருப்பி மதுகுடிக்க சென்றனர்.

 



 

மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று மதுபிரியர்கள் சைக்கிளில் புதுச்சேரிக்கு படையெடுக்க தொடங்கினர். இதற்கிடையே ஆல்பேட்டை சோதனை சாவடி வழியாக பேரணி செல்வதுபோல் சைக்கிளில் வந்தவர்களை பிடித்து காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் அவர்கள் கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு சென்று மது குடித்துவிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பிரியர்களிடம் இருந்து 30 சைக்கிள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபிரியர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.