விழுப்புரம்: சாராய ஆலைகள் வைத்துள்ள திமுவினரே அவர்களின்  பிரதிநிதிகள் கொண்டு மதுவிலக்கு மாநாட்டு மேடையில் வைத்து நடத்தினால் என்ன பயன் கிடைக்கும் என்றும் அமலாக்கதுறை தைலாபுரத்திற்கு வரமுடியாது இங்கு மரத்தின் நிழல் மட்டுமே உள்ளது அப்படி எந்த ஒரு நிழலையும் நுழைய  விடமாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த  பாமக நிறுவனர் ராமதாஸ்....

 

கர்நாடகாவில்  எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படுமென அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.  அவை செயல்படுத்தும் போது முழுமையான சமூக நீதி அம்மாநிலத்தில் நிகழும் எனவும் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு காந்தியடிகள் பிறந்த நாளில் தாக்கல் செய்தனர். அதே போன்று சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு தான் உள்ளது என கூறி தமிழக முதல்வர் தட்டி கழித்து வருவதாகவும் 69 சதவிகித விழுக்காடு பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் செய்யவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

 

ஆசிரியர்கள் வருவாய்துறையினரை பயன்படுத்தினால் 45 நாட்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்திடலாம் இதற்கு 500 கோடி கூட செலவாகாது அதனால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக பட்டிலினத்தை சார்ந்த கோவி செழியன் உயர்கல்வி துறை அமைச்சராகியுள்ளது. இது பட்டியலினத்திற்கு வழங்கியுள்ள அங்கீகாரம் என்றும் இந்த அங்கீரத்தை திமுக வழங்கவில்லை வழங்க செய்தது பாமக என கூறினார்.

 

பட்டியலின சமூகத்திற்கு உயர்பதவிகள் வழங்கவில்லை என அம்பலபடுத்தி வந்ததால் இன்று உயர்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடி இருளர் சமூகத்தை சார்ந்த பெண் தலைவர் சங்கீத சமூக நீதிக்காக போராட்டம் நடத்தி உள்ளார். நாற்காலியில் அமரவிடாமலும் கோப்புகளில் கையெழுத்து போட விடாமல் தடுகிறார்கள் ஜாதியின் பெயரால் திட்டுவதாக சங்கீதா குற்றஞ்சாட்டுகிறார். சங்கீதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டிக்கதக்கது இதற்கு காரணம் திமுகவினரும் அதிகாரிகள் மட்டுமே காரணம் சங்கீதா ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் உரிய அனுமதியுடன் செயல்பட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் தன் கையால் அழைத்து சென்று சங்கீதாவை நாற்காலியில் அமரவைத்து செயல்பட வைப்பேன் எச்சரித்துள்ளார்.

 

நகர்புற உள்ளாட்சியுடன் ஊர உள்ளாட்சியை இணைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்றும் செய்யாறு சிப்காட் தொழிற் பூங்காவை விரிவாக்க செய்ய 2700 விளை நிலங்கள் கையகப்படுத்தபடுத்த கூடாது நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடரும் என அரசு அறிவித்துள்ளது. சிப்காட் அமைப்பதற்கு பாமக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் உழவர்களை வேதனை படுத்திய எந்த அரசும் நீடித்து  இருந்ததில்லை  இதற்காக போராட்டம் செய்வோம் என எச்சரித்தார்.

 

சம்பா சாகுபடிக்கு காவிரி கிளையாறுகளில் போதிய அளவு நீர் திறந்ததால் பாதிப்பில்லாமல் இருக்கும் மேட்டூர் அனையின் நீர் இருப்பு 94 அடியாக உள்ளதால் அந்த நீரை கொண்டு சாகுபடி செய்ய இயலாது என்பதால் கர்நாடகாவிலிருந்து நீரை கேட்டு பெற வேண்டும் 116 டி எம் சி நீரை வைத்து கொண்டு செப்டம்பர் மாதத்திற்கான நீரை கர்நாடக அரசு தராமல் உள்ளது இதனை கேட்டு பெறாமல் தமிழக அரசுக் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக கூறினார்.

 

மதுவிலக்கிற்காக யார் போராடினாலும் அதனை தானும் வரவேற்பதாகவும், சாராய ஆலையை உற்பத்தி செய்பவர்களே திமுகவில் தான் உள்ளார்கள் அவர்களுடன் தான் கூட்டணி வைத்திருக்கிறார்கள் சாராய ஆலையை வைத்திருப்பவர்களை கண்டிக்கனும் அதற்கான தீர்மானத்தை விசிக நிறைவேற்றி இருக்கனும், சாராய ஆலைகள் வைத்துள்ள திமுவினர் அவர்களின்  பிரதிநிதிகள் கொண்டு மதுவிலக்கு மாநாட்டில் மேடையில் வைத்து நடத்தினால் என்ன பயன் கிடைக்கும் என கேள்வி எழுப்பினார். மதுவிலக்கு தொடர்பான போராட்டம் சமரசமற்றதாக இருக்க வேண்டும். எந்த அமலாக்கதுறையும் இங்க வரமுடியாது பாமகவின் கோட்டை இங்கு மரத்தின் நிழல் மட்டுமே உள்ளது அப்படி எந்த ஒரு நிழலையும் நுழைய விடமாட்டேன் என்று கூறினார்.