கர்ப்பப்பை வாய்புற்றுநோயால் cervical cancer உலகில் ஏற்படும் மரணங்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.20 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில், 75,000 பேர் உயிரிழக்கின்றனர்.
புற்றுநோயால் அதிக இழப்பு இந்தியாவில் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக மருத்துவத்துறை பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 9 வயது முதல் 14 வயதுடைய பெண்கள் கட்டாயமாக இந்த கர்ப்பப்பை வாய் நோய்க்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் அரசு பொது சுகாதார நிபுணர் டாக்டர் நிஷாந்த் தெரிவித்துள்ளார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் (cervical cancer ) அறிகுறிகள் :
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாயின் உயிரணுக்களில் ஏற்படும் ஒரு வகை புற்றுநோயாகும். இந்த புற்றுநோய் கருப்பை வாயின் ஆழமான திசுக்களை பாதிக்கலாம் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு (மெட்டாஸ்டாசைஸ்), பெரும்பாலும் நுரையீரல், கல்லீரல், சிறுநீர்ப்பை, புணர்புழை மற்றும் மலக்குடல் ஆகியவற்றிற்கு பரவக்கூடும்.
இந்த புற்றுநோயானது உலகளவில் பெண்களின் ஆரோக்கியத்தை கடுமையாக அச்சுறுத்தும் இரண்டாவது பொதுவான பெண் வீரியம் மிக்க (புற்றுநோய்) கட்டியாகும். ஏறக்குறைய அனைத்து கர்ப்பப்பை வாய்புற்றுநோய்களும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்றினால் ஏற்படுகின்றன.
சில சந்தர்ப்பங்களில் எந்த அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கலாம், ஆனால் பொதுவான அறிகுறிகளில் மாதவிடாய் மற்றும் உடலுறவுக்குப் பிறகு இரத்தப்போக்கு அடங்கும். அடிவயிறு வலித்தல், துர்நாற்றம் வீசும், வெள்ளை வெளியேற்றம் இது போன்ற பல அறிகுறிகள் தென்படும். மாதவிடாய் முடிந்த பிறகும் திடீரென ரத்தப்போக்கு ஏற்படலாம்.
எப்படி தடுப்பது...?
இளம்வயதில் திருமணம் செய்துகொள்பவர்கள் அல்லது இளம்வயதில் உடலுறவில் ஈடுபடுபவர்கள் மற்றும் உடலுறவின்போது சரியான சுகாதார முறைகளை மேற்கொள்ளாத பெண்கள்தான் இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் இளம் வயதில் மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு செய்தவர்கள், அதிகமான குழந்தைகள் பெற்று கொள்பவர்கள், பலருடன் பாலியல் உறவில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக எச்.ஐ.வி., பாதித்தவர்களுடன் உறவு மேற்கொண்டவர்கள் போன்றவர்களுக்கும் கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற செயல்களை செய்யாமல் தவிர்த்தாலே போதும்.
பரிசோதனைகள்:
பாப் சோதனை அல்லது பாப் ஸ்மியர் சோதனை, HPV சோதனைகளாகும். வழக்கமான சோதனைகளுக்குச் செல்லுங்கள்- பாப் சோதனைகள் மற்றும் HPV சோதனைகள் மிகவும் முக்கியம். அவை உங்கள் உடலில் ஏதேனும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிய மருத்துவருக்கு உதவுகின்றன. HPV தடுப்பூசியைப் பெறுங்கள்- HPV தடுப்பூசி முக்கியமானது, ஏனெனில் இது HPV 16 மற்றும் 18 க்கு எதிராக உங்களைப் பாதுகாக்கிறது, இவை இரண்டு வகையான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உண்டாக்கும். தடுப்பூசிகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக மூன்று ஷாட் தொடரில் வழங்கப்படுகின்றன.
எனவே பெண்கள் மலேரியா, டெங்கு போன்ற நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள பொதுவாக செலுத்தப்படும் தடுப்பூசி போல தான் இந்த தடுப்பூசியும். இந்த தடுப்பூசிஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும். எனவே 9 முதல் 14 வயதுடைய பெண்கள் கட்டாயமாகவும், 45வயது வரை பெண்கள் அனைவருமே இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என அரசு மருத்துவர் நிஷாந்த் தெரிவித்தார்.