தமிழகம் முழுவதும் வரும் 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் அனைத்து கட்சியினர் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை கடலூர் மேற்கு மாவட்டத்தின் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது, அதனை தொடர்ந்து நேற்று இரவு திமுக கடலூர் கிழக்கு மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

 



 

 

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகராட்சி தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு மாநகராட்சி முதல் தேர்தல் நடைபெறுகிறது இந்த நிலையில் திமுக,அதிமுக இடையே முதல் மேயர் வேட்பாளர் யார் என்ற கேள்வியும் விவதாமும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில் கடலூர் நகர திமுகவில் முதல் மேயர் யார் என்று கடுமையான போட்டி ஏற்பபடுள்ளது இதனால் இந்த முறை பலர் வார்டு உறுப்பினருக்கு கட்சியில் விருப்பமனு தாக்கல் செய்தனர்.இந்த சூழ்நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுன் நகர திமுக நகர செயலாளர் ராஜா அவர்களின் ஆதரவாளர்கள் ராஜா அவர்களின் மனைவி சுந்தரிதான் கடலூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என சமுக வலைதளங்களில் அறிவித்தனர் இதனால் திமுக கட்சியில் இடையே சலசலப்பு ஏற்பபட்டது.

 





 

இதன் அடிப்படையில் இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 1 ம் தேதி காலை வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிதற்கு முன்னரே கடலூர் திமுக நகர செயலாளர் ராஜா அவர்களின் மனைவி சுந்தரி 20 வார்டில் போட்டியிடுவதற்காக கட்சி துண்டுடன் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று வெளியான கடலூர் மாநகராட்சி வேட்பாளர் பட்டியலில் நகர செயலாளர் மனைவி சுந்தரி வேட்புமனு தாக்கல் செய்த 20 ஆவது வார்டு கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது, மேலும் நகர செயலாளர் ராஜா அவர்களது பெயரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 



 

 

மேலும் மாநகராட்சி தேர்தல் அறிவித்ததில் இருந்தே கடலூர் நகர செயலாளர் அல்லது அவரது மனைவி தான் கடலூர் மாநகராட்சியின் திமுக மேயர் வேட்பாளர் என சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் தற்பொழுது வேட்பாளர் பட்டியலில் இருவரின் பெயரிமே இல்லாததால் கட்சியினர் இடையே அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.