விழுப்புரம்: திமுக ஆட்சியில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசாக தான் திமுக உள்ளதாகவும் அதிமுக ஆட்சியில் தவறு செய்பவர்கள் கைது செய்யப்படவில்லை திமுக ஆட்சியில் தவறு செய்பவர்கள் கைது செய்வதால் தான் வெளியில் தெரிவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 


மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில்  கள்ளச்சாராயம்  அருந்தி முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், எம்எல்ஏ லட்சுமணன் புகழேந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மது போதை விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டு மேலும் 4 பேர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக முதல்வர் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க கூடாது என்பதற்காக கஞ்சா போதையை தடுக்க காவல் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கி செயல்பட வலியுறுத்தி செயல்பட்டு வருகிறார். அதிமுக ஆட்சியில் தான் குட்கா எப்படி வந்தது கள்ளச்சாராயம் அதிகரித்தது எல்லாம் அவர்கள் ஆட்சியில் தான் அதிமுக ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்ய ஊக்குவிக்கப்பட்டார்கள் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயல்பட்டு உள்ளார்கள். திமுக இரண்டு ஆட்சியில் கஞ்சா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.


இரண்டு ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் தடுக்கப்பட்டு உள்ளார்கள். திமுக ஆட்சியில் திமுகவினர் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பவர் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்” எனக் கூறினார். காவல் துறையில் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள் தான் இல்லை என்று கூறவில்லை தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசாக தான் திமுக உள்ளததாகவும் அதிமுக ஆட்சியில் தவறு செய்பவர்கள் கைது செய்யபப்டவில்லை திமுக ஆட்சியில் தவறு செய்பவர்கள் கைது செய்வதால் தான் வெளியில் தெரிவதாக தெரிவித்தார்.  மேலும் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தான் டாஸ்மாக்கை கொண்டு வந்து அரசே நடத்த வேண்டுமென கூறினார். அப்போதே நாங்கள் அதனை எதிர்த்தோம் வேண்டாமென கூறியதாகவும் அம்மாவிற்கு என்ன பழக்கமோ எனக்கும் அந்த பழக்கம் என கூறியதற்கு என் வீட்டில் சோதனை செய்தனர். அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்காக கொண்டுவந்ததே அவர்கள் தான் என கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண