விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமலாக்க துறை சோதனை திமுகவிற்கு ஒரு பாடம் என கூறுவது மறைமுகமாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலாவை அவர் குறிப்பிடுகிறார் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் இளைஞர்களின் நலனே நாட்டின் நலம், மக்கள் நலன் பேனும் மகத்தான அரசு, எழில்மிகு நகரங்களும் வளமிகு வட்டாரங்களும் என்ற பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இந்த பேரணியை சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆட்சியர் பழனி கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.


பேரணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ் மொழியை உலகமெங்கும் எடுத்து சென்ற முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா கருணாநிதி போன்றவர்கள் வழியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுவதாகவும் அமலாக்க துறை சோதனையை குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சட்டத்தை சட்டரிதீயாக சந்திக்க திமுக பின்வாங்கியதில்லை என தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமலாக்க துறை சோதனை திமுகவிற்கு ஒரு பாடம் என கூறியுள்ளதற்கு பதிலளித்த அமைச்சர், திமுக அமைச்சர்களுக்கு பாடம் என்று கூறும் ஜெயக்குமார், மறைமுகமாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலாவை அவர் குறிப்பிடுகிறார் என்றும் விலைவாசி பற்றி பேசிய அவர், பாஜக அண்ணாமலை உலகம் சுற்றும் வாலிபன் மோடியிடம் விலைவாசி பற்றி பேசி விலை உயர்வை கட்டுப்படுத்த அவர் நடவடிக்கை முதலில் எடுத்திருக்க வேண்டுமென கூறினார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண