விழுப்புரம் மாவட்டத்தில் 2024 தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் அரசு பொது இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அரசு உத்தரவின்படி தற்காலிக பட்டாசு உரிமம் அரசு பொது இசேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.


விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டிய ஆவணங்களின் விவரம்.


1. மனுதாரரின் மனு


2. படிவம் AE பூர்த்தி செய்த விண்ணப்பம்


3. உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திரநகல்


4. உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில் இடத்தின் கட்டிட ரிமையாளரிடம் ரூ.20 க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் ஒப்பந்த பத்திரம், முத்திரைத்தாளில் Notary public and Affidavit பெற வேண்டும்.


5. மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம்


6. நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்தியரசீது


7. மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம்-2


8. தற்காலிக வெடிபொருள் உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள் (Blue Print)


9. உரிமக் கட்டணம் ரூ.600 யை உரிய அரசு கணக்கில் செலுத்தி அதற்கான செலுத்துச் சீட்டு


தற்காலிக வெடிபொருள் உரிமம் ஆனது உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் மட்டுமே செல்லத்தக்கதாகும்.


மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிப்பவர்கள் மேற்காணும் அனைத்து சான்றிதழ்களையும் இ - சேவை மையத்தில் கொடுத்து பதிவேற்றம் செய்திட விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி கேட்டுக்கொண்டுள்ளார்.