தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் இவை மூன்றும் பிரதானமாக உள்ளது. இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் விழுப்புரத்தின் முக்கிய வணிக வீதியான காமராஜர் வீதி, திரு விக வீதி, எம் ஜி ரோடு, பாகர்ஷா வீதிகளில் உள்ள துணிகடைகள், இனிப்பு கடைகள், பட்டாசு கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதின. கடந்த மூன்று தினங்களாகவே விழுப்புரத்தில் தொடர்ந்து விட்டு விட்டுமழை பெய்து வருவதால் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் பொருட்களை வாங்க வெளியே வர முடியாத சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று சற்றே மழைப்பொழிவு குறைந்துள்ளதால் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள், இனிப்புகள், புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன.


லீயோ சாரீஸ்


மேலும் மக்களை கவர்வதற்காக பல வகையான ட்ரெண்டிங் புத்தாடைகள், பாப்கார்ன் மெட்டீரியல், லீயோ சாரீஸ் என மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வந்தனர். மக்கள் அதிகமானோர் கூடுவார்கள் என்பதால் விழுப்புரத்தில் 500 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றச்சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பினை சரி செய்ய கண்காணிப்பு கோபுரங்கள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




புதுச்சேரியில் களைகட்டிய வியாபாரம் 


தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் வியாபாரம் களைகட்டியுள்ளது. புதிய ஆடைகள், பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை வாங்குவதற்காக மக்கள் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளுக்கு வருகின்றனர். புறநகர், கிராமப்புற பகுதியிலிருந்தும், வெளி மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்திலில் இருந்தும் புதுவைக்கு மக்கள் பொருட்கள் வாங்க படையெடுத்தனர். இதனால் புதுவை நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கும் சண்டே மார்க்கெட் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து இயங்கி வருகிறது. நேற்று இரவு திடீரென மழை பெய்தது. இதனால் வியாபாரம் பாதித்தது. சண்டே மார்க்கெட் கடைகளை மூடினர். 500 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




தீபாவளி பூஜை


நவம்பர் 12-ம் தேதி ராகு காலம் தவிர்த்து மற்ற நேரங்களில் இறைவனுக்கு பூஜை செய்ய உகந்த நேரமாக சொல்லப்படுகிறது. விநாயகரையும், லஷ்மியையும் பூஜித்து ஆசியை வேண்டுவது நலம். மோதகம், அல்வா ஆகியனவற்றை செய்து படைப்பார்கள். பூஜை முடிந்த பின்னர் விளக்கேற்றி, பட்டாசுகள் வெடித்து தீய சக்திகளை விரட்டலாம் என்றும் நம்பப்படுகிறது.


இந்நிலையில் இன்று காலை மீண்டும் நகர பகுதியில் அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருந்தது. முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக நகர பகுதியில் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் தடை விதித்திருந்தனர். புதுவையில் பரவலாக அவ்வப்போது பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள கூட்டம் அலை மோதி வருகிறது.